Best Retirement Home

Testimonial


 

Preetham Retirement Enclave is situated on the highway between Coimbatore and Pollachi inside a coconut grove amidst rural background. The amenities available is more than enough for a person under any circumstances. The food served provided becomes sweeter as a result of the kindness and affection with which it is served to the residents. The courtesy shown by the C.E.O. to the last grade employee, to the residents is an ideal tool for making the Preetham Retirement Community a Home away from home.

K.S.Venkataramani(A-7)


குடும்பம் எனும் சொல்லுக்கு
“ குடும்பம் ஓரு கோவில்”
“ நல்ல குடும்பம் ஒரு பல்கலைகக்ழகம்” போன்ற பல சிறப்புகளிருந்தாலும் “ வீட்டுக்கு வீடு வாசப்படி” என்ற பழமொழி போல வாசப்படி இல்லாத வீடும் இல்லை பிரச்சனை இல்லாத குடும்பமும் தற்சமயம் நம் சமுதாயத்தில் இல்லை என்பது தான் உண்மை. குடும்பத்தில் பிரச்சனை வரும் போது சிலர் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டியது அவசியமாகிறது. அப்படி வெளியேறுகிறவர்களுக்கு தங்க பாதுகாப்பான இடமும் உண்ண தரமான உணவும் அவசியத் தேவை. இந்த தேவைகளையும் இது போன்ற மற்ற அவசியங்களையும் பார்த்துப் பார்த்து செய்து தருகிறார்கள் இந்த பிரீத்தம் விடுதியை நடத்தும் திருமதி.வனிதா ரெங்கராஜன் அவர்களும் அவருடைய கணவர் திரு.ரெங்கராஜன் அவர்களும்.

இந்த விடுதி கோவை – பொள்ளாச்சி (பிரதான) தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சிக்கு சற்று அருகிலும் (8 கி.மீ) கோவைக்கு சற்று தொலைவிலும் (30 கி.மீ) அமைந்துள்ளது. இந்த விடுதியை சுற்றிலும் தென்னந்தோப்புகளாக உள்ளதால் இந்த விடுதிக்கு இயற்கையாகவே குளுகுளு வசதி கிடைக்கிறது.
இந்த விடுதியில் தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளம் என மூன்று தளங்கள் உள்ளன. நாள் முழுக்க இயக்கப்படும் மின் தூக்கி (லிப்ட்) இங்குள்ளவர்களுக்கு ஒரு பெரிய வசதி. மூன்று தளங்களிலும் வைக்கப்பட்டுள்ள கலைப் பொருட்களின் அலங்காரம் அழகுக்கு அழகு மனதுக்கு அமைதி.
இங்கு வாழ்பவர்களின் உடலும் உள்ளமும் உறுதி பெற யோகா, தியானம் மற்றும் முத்திரை வைத்தியம் போன்றவற்றைக் கற்றுத்தர சிறப்பு வகுப்புகள் உண்டு.
(இலக்கியம் சார்ந்த மற்றும் இனிய வாழ்க்கையை அனுபவிக்க) இங்குள்ளவர்களின் வயதுக்குப் பொருத்தமான உடற்பயிற்சி நடைப்பயிற்சி. இதற்காக நாம் வெளியில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இங்குள்ள அறைகளை இணைக்கும் வெளிவராந்தாவே இதற்குப் போதும். வெளியே காற்று, மழை, வெயில், பனி, குளிர் எதுவாக இருந்தாலும் உள்ளே நடைப்பயிற்சி நடந்துகொண்டே இருக்கும். இந்த அமைப்பை வடிவமைத்தவர்களின் தொலை நோக்கு பார்வைக்கு இது ஒரு அத்தாட்சி.
இங்கு தென்னிந்திய உணவுடன் அவ்வப்பொழுது சப்பாத்தி, கேழ்வரகு கூழ், ஓட்ஸ் கஞ்சி, கோதுமை சாதம் மற்றும் குதிரைவாலி சாதமும் பரிமாறப்படுகிறது.
இந்த விடுதியில் இலக்கியம் சார்ந்தும் மற்றும் இனிய வாழ்வை அனுபவிப்பதற்கான ஏற்பாடுகளும் நன்றாகவே செய்து தரப்படுகின்றன.
பேச்சு - அழகர் ராமனுஜம் ஐயா, பேராசிரியர் மாது
கலந்துரையாடல் - பேச்சாளர் சுகி.சிவம், நடிகர் ராஜேஷ், நடிகர் ஜி.வி.பிரகாஷ்
இசை – புல்லாங்குழல், இரண்டு கலைஞர்கள்
கலை – நடனம் - இரண்டு கலைஞர்கள்
பட்டிமன்றம் - திருமதி.மகேஸ்வரி சற்குரு (நடுவர்) தலைமையில்
இங்கு வேலை செய்பவர்கள் விடுதியில் தங்கியுள்ளவர்களை அப்பா, அம்மா என்று பாசத்துடன் அழைப்பது ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தில் வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
குடும்பப் பொறுப்புகளையும் மற்ற பொறுப்புகளையும் நல்ல முறையில் நிறைவேற்றிவிட்டு மீதிக்காலத்தைக் கழிக்க இங்கு வந்தால் இங்குள்ள சூழ்நிலை அவர்களின் வாழ்நாளைக் கூட்டும்.
“ஆலயம் தொழுவது சாலமும் நன்று”, இங்கு அமைந்துள்ள ஆனந்தவிநாயகர் ஆலயமும் அதிலுள்ள முருகர் - வள்ளி தெய்வானை, காமாட்சி அம்மன், ஆஞ்சநேயர் ஆகியவை இந்த விடுதியின் சிறப்பு அடையாளங்கள்
இப்படிக்கு – முனைவர் செ.நடராஜன், திருமதி.தர்மாம்பாள், திருச்சி


testimonial
Being born and brought up in a foreign country, i still am very Indian at heart. and
"I Love my India"
I have been living alone in India for the past 26 years and it as been
8 years now that i have been searching for a place where i would be happy to put my head down and rest.
But there was nothing that cought my fancy.
Preetham happened like magic in my life. I had never heard of this place before, till the cab driver( bless his heart) drove into the gates of Preetham and down the coconut boardered
drive- way .
Off- course i did meet the amazing Lady Vanitha and that was it.
Now Preetham to me, is a home away from home
I find Preetham to be very special. It is peaceful and there is something very Divine about this place.
We have comfortable rooms all with attached bathrooms.
At Preetham they work round the clock to make sure that the place is always kept clean and tidy.
The staff are very pleasent and always ready to help. The best of all, and which we should be so grateful for, is the fresh, hot and unlimited good healthy food that we are served with.
But my favourite place where i spend most of my time is the roof top. Preetham very kindly allowed me to continue growing my garden, that i brought with me all the way from Chennai.
Now it's everybody's garden,other people have taken an interest in planting and they also help to water the plants.
Preetham makes life interesting for us young at heart old people.
We have a Yoga class,
an Acupressure class. A craft class and also a laughing club going on for us
Every now and then we are taken out to the movies and visits to different temples. We are even taken out shopping. and to top it all, we are even offered the privilege, to go abroad on arranged tour's ( if our pocket allows it )
I have been living here for the past 16 months and feel happy to be part of Preetham's Big family.
Where i have found many good friends.
I am 70 year's young and hope to spend many more pleasent years at Preetham.
My appreciation and best wishes to Preetham.
Padhmavathee from
Room No. B-20
7th May 2019.
Copyright © 2023 All rights reserved. Web Design - hosted & promoted by Nissi Infotech